கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

#SriLanka #Colombo
Mayoorikka
1 year ago
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ' USS Stockdale ' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

 இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பல் 155.3 மீட்டர் நீளமுடையதாகும். 

லாரன் ஜான்சன் இதன் கட்டளை அதிகாரியாக செயற்படுகின்றார். விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் , இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!