அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!
#SriLanka
#Egg
Mayoorikka
11 months ago

நாட்டில் அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக இதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார். உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை 50 ரூபாவாக காணப்படுவதன் காரணமாக, முட்டை இறக்குமதி தொடர்பில் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



