இன்றுமுதல் நல்லூர் ஆலய வீதிகளில் பயணம் செய்ய தடை!

#SriLanka #Nallur
Mayoorikka
11 months ago
இன்றுமுதல் நல்லூர் ஆலய வீதிகளில் பயணம் செய்ய தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. 

 குறித்த வீதித் தடை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/08/1723089026.jpg

 வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக நேற்று துறைசார் அதிகாரிகளால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

 யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!