ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

 இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிணைப் பணத்தை வைப்பிலிடுவதற்கான காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

 இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

 இல்லாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் பல வாக்குகள் செல்லுபடியாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!