மொனராகலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மொனராகலை மற்றும் கரடுகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இன்று (04.08) அதிகாலை வீட்டுக்கு வந்த ஒருவரால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை, கிண்ணியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல் ஓயா பிரதேசத்தில் 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கரடுகலவில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவருக்கு 42 வயது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.