தனது புகைப்படத்தை பயன்படுத்த எவருக்கும் தடையில்லை! மஹிந்த பகிரங்கம்
#SriLanka
#Mahinda Rajapaksa
Mayoorikka
1 year ago
தனது புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த எவருக்கும் தடையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தனது புகைப்படங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அவர்கள் தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு தடையில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.