கண்புரை சிகிச்சை: பலருக்கு பார்வை இழப்பு!
#SriLanka
#Eye
Mayoorikka
1 year ago
கண்புரை சிகிச்சை செய்தவர்களில் பலர் தங்களுடைய பார்வையை இழந்துவிட்டனர் என்றும் இதனால், பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
நுவரெலியா தேசிய வைத்தியசாலையில், ஜூலை 29 ஆம் திகதிக்கு பின்னர் கண்புரை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலர் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தொடர்பில் வைத்தியசாலையின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கிறோம்.
எனினும், கண்புரை சிகிச்சை செய்த 52 பேரில், சிலருக்கு இரண்டொரு நாட்களுக்கு மட்டுமே அவ்வாறான நிலைமை இருந்தது என்றும், இரண்டு நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களில் பலரின் பார்வை வழமைக்குத் திரும்பியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.