இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது!

புத்தளம் பகுதியில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் நேற்று (30.07) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அங்கு 44 ஆண்களும் 9 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.  

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் குழு கடத்தலை மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர் விசாரணை அதிகாரிகள் ஹோட்டலை சோதனையிட்டனர். 

அங்கு 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கணினி குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் மேலும் இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!