இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் பணவீக்கம்!
#SriLanka
#inflation
Mayoorikka
11 months ago

2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.
இது ஜூன் 2024 இல் 1.7% ஆக பதிவாகியிருந்தது. உணவு வகையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5% ஆக உயர்ந்ததுள்ளதுடன், ஜூன் 2024 இல் அது 1.4% ஆக நிலவியது.
மேலும், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 2.8% ஆக அதிகரித்துள்ளதுடன், 2024 ஜூன் மாதத்தில் அந்த பணவீக்கம் 1.8% ஆக காணப்பட்டதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



