ஹமாஸ் பிரிவுத் தலைவர் படுகொலை எதிரொலி: ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
#SriLanka
#Iran
Mayoorikka
1 year ago
ஈரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலைச் செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தே கவனம் செலுத்தியுள்ளார்.
இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.