ஊழல் ஒழிப்பு சட்டமூலம் சமர்ப்பிக்க வேண்டாம் : ஜனாதிபதிக்கு அழைப்பு

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
11 months ago
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் சமர்ப்பிக்க வேண்டாம் : ஜனாதிபதிக்கு அழைப்பு

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ள நிலையிலேயே தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் இளம் எம்.பி., இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!