தென்னிலங்கையில் சூடு பிடித்துள்ள தேர்தல் களம்: மஹிந்த -தம்மிக்க திடீர் சந்திப்பு
#SriLanka
#SLPP
#Mahindha
Mayoorikka
11 months ago

தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம்(30) விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.



