பங்காளிக் கட்சிகளை அவசரமாக சந்தித்த சஜித்: கைச்சாத்தாகவுள்ள உடன்படிக்கை
#SriLanka
#Sajith Premadasa
Mayoorikka
11 months ago

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்று புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
எனவே, குறித்த உடன்படிக்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



