வத்தளையில் மூன்று மாடி வீடொன்றில் திடீர் தீவிபத்து: ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Colombo
Mayoorikka
11 months ago

வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 90 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மட்டும் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



