மொட்டு கட்சியுடன் ரணில் கூட்டு சேரக் கூடாது : 76 சதவீத மக்கள் கருத்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மொட்டு கட்சியுடன் ரணில் கூட்டு சேரக் கூடாது : 76 சதவீத மக்கள் கருத்து!

ஏறக்குறைய 76% வாக்காளர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா?  என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், 76 சதவீதமான மக்கள் கூடாது என்ற பதிலை தெரிவு செய்துள்ளனர். 

மொத்தம் 1,645 பதிலளித்தவர்களில், கிட்டத்தட்ட 76% பேர் ‘இல்லை’ என்றும், கிட்டத்தட்ட 21% பேர் ‘ஆம்’ என்றும், கிட்டத்தட்ட 3% பேர் ‘தெரியாது’ என்றும் வாக்களித்துள்ளனர்.

கடந்த மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்தில் தனது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற குழுவிற்கு ராஜபக்சக்கள் எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!