அரச அச்சகத்துக்கு அதியுச்ச பாதுகாப்பு
#SriLanka
#government
Mayoorikka
11 months ago

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு இன்று (29) முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அச்சகத்துக்கு சென்றிருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி திருமதி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்



