அரகலய போராட்டக்காரர்களின் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
#SriLanka
#Colombo
#Election
Mayoorikka
11 months ago

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் இன்று தனது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.
கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று 1.00 மணியளவில் இடம்பெறவுள்ள நிகழ்வில் மக்கள் பேரவைக்கான இயக்கம் தனது வேட்பாளர் குறித்து அறிவிக்கவுள்ளது.
தேர்தலை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் நிலைப்பாடுகள்குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டு ஜூன் மாதம் மக்கள் பேரவைக்கான இயக்கம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



