ஜனாதிபதி தேர்தல் : தபால் திணைக்களத்தின் செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களைக் கணித்து 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரணவில் இன்று நடத்திய விசாரணையில் இவ்வாறு தெரிவித்தார்.
பொது அஞ்சல் கட்டணம், பதிவு செய்யப்பட்ட அஞ்சல் கட்டணம், எழுதுபொருட்களுக்கான செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவுகளுக்காக இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.