பொலிஸ் மா அதிபர் விவகாரம்: கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டும்! ரணில்

#SriLanka #Sri Lanka President #Police #Ranil wickremesinghe
Mayoorikka
11 months ago
பொலிஸ் மா அதிபர் விவகாரம்: கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டும்! ரணில்

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு தனித்தனியாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

 பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை எதுவாக இருந்தாலும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி மேலும் சபாநாயகருக்கும் பிரதம நீதியரசருக்கும் அறிவித்துள்ளார்.

 எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!