மூன்றாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவு

#SriLanka #Election
Mayoorikka
11 months ago
மூன்றாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஏனெனில் அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்தனர்.

 அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் அறிவித்துள்ளதோடு, தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து ஜன பலவேகவின் வேட்பாளருக்கு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உப ஜனாதிபதி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 உத்தியோகபூர்வ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது குழு எனவும், கட்சியின் தலைமையகம் தமது குழுவின் பிடியில் இருப்பதால் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என சிலர் கூறுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!