எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07) தினம்தெரிவித்தார்.



