இலங்கைக்கு வந்துக்கொண்டிருந்த கப்பலில் நடுக்கடலில் திடீர் தீ விபத்து!
#SriLanka
#Ship
Mayoorikka
1 year ago
குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் வந்ததாகவும், வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக இரண்டு ICG கப்பல்கள் கோவாவில் இருந்து தீயை அணைக்கும் முயற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன.