வியட்நாம் நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் மரணம்
#Death
#Vietnam
#Politician
Prasu
1 year ago

வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும், நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவருமான நுயென் ஃபூ ட்ரோங் தனது 80 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
வயது மூப்பு மற்றும் மோசமான உடல்நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து வியட்நாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
அவரது பதவிக்காலத்தில் வியட்நாமின் ஒற்றைக் கட்சி அரசியல் அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த அவர் பணியாற்றினார்.



