கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 செக் - இன் கவுண்டர்கள் அறிமுகம்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக கட்டப்பட்ட விமான முனையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட இந்த வசதி, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) மற்றும் பல முக்கிய தொழில்துறை பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
AASL இன் கூற்றுப்படி, இந்த முயற்சி விமான நிலைய செயல்பாடுகளை மென்மையாக்குவதையும், பயணிகள் போக்குவரத்து பொதுவாக அதிகரிக்கும் குளிர்கால பயணக் காலத்தில் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத வசதியை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயணிகளின் தேவையைப் பொறுத்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இது இலங்கைக்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்கான ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
