முன்னணி பாடசாலை இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் குறித்து விசாரணை
#SriLanka
#School
Mayoorikka
1 year ago

நாட்டில் ஏழு முன்னணி பாடசாலைகளின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் கணினி அவசர தயார்நிலைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சில இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கணினி அவசர தயார்நிலைக் குழு சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சைபர் தாக்குதலுக்குள்ளான பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



