யாழ்ப்பாணத்தில் நடுக் கடலில் பிறந்த குழந்தை!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.



