கல்விதுறையில் முன்னெடுக்கப்படவுள்ள மாற்றங்களுக்கு யுனெஸ்கோவின் ஆதரவை பெற நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பட்ட கல்வி முறை நாட்டில் உருவாக்கப்படும் என்றும், இந்த நாட்டின் குழந்தைகளுக்கு நவீன உலகத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் நேற்று (17.07) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



