குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நபர் கடத்தப்பட்ட விவகாரம் : சந்தேகநபர்கள் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நபர் கடத்தப்பட்ட விவகாரம் : சந்தேகநபர்கள் கைது!

குவைத் மாநிலத்தில் பணிபுரிந்து இலங்கை திரும்பிய ஒருவரை மாவத்தகமவில் கடத்திச் சென்று நாரம்மல பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் அடைத்து வைத்திருந்த நான்கு சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த அதே இடத்தில் பணிபுரிந்த மற்றுமொருவரின் திட்டத்தின் பிரகாரம் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஒரு கோடி ரூபாய் கப்பம் பெறுவதற்காக இந்த கடத்தல் நடந்துள்ளது. விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் நாரம்மல மற்றும் கட்டுபொத பிரதேசங்களில் வசிக்கும் 31-39 வயதுடையவர்கள் என்பதுடன், குறித்த நபரை கடத்த பயன்படுத்திய கெப் வண்டியும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!