நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகை வழங்காத வர்த்தகர்களை தேடி சோதனைகளை ஆரம்பிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தலைவர்  துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஏனைய கடைகளில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!