கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன் : வைரலாகும் காணொலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சிறுவனை அடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் பரவிய நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, குழந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் குழந்தையின் இரு பாட்டிகளும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயும் மற்றொரு பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 42 மற்றும் 78 வயதுடையவர்கள்.
சந்தேகநபர்களை இன்று (17.07) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான குழந்தையை மாவனல்லை சட்ட வைத்தியர் முன்னிலையில் தந்தையின் பாதுகாப்பில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



