இலங்கையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள புதிய முறைமை அறிமுகம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விமான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது



