ருவன்வெல்லவில் நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு அருகில் அவரது பேச்சு குறைபாடுள்ள தாயார் மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இந்த சம்பவம் இன்று (17.07) காலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



