தேர்தலை பிற்போட நினைத்தால் நாட்டில் இரத்தக்களரியான நிலை ஏற்படும் - முன்னாள் ஜனாதிபதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16.07) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரக் கணக்கானோரின் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.



