ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய இலங்கையர்கள் மாயம்!
#SriLanka
#Oman
#Ship
Mayoorikka
1 year ago
ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது. யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கமரூன் நாட்டு கொடியுடன் பயணித்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றே குடைசாய்ந்து, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலில் பயணித்த பணியாளர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.