யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார்!
#SriLanka
#Sri Lanka President
#UNESCO
Mayoorikka
1 year ago

யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே சந்தித்துள்ளார்.
இலங்கையின் யுனெஸ்கோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று தாமரை தடாக திரையரங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



