ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! எஞ்சிய தொகையை செலுத்த 6 வருடங்கள் தாருங்கள்: மைத்திரி
#SriLanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.