மீண்டும் வரும் வைத்தியர்அர்ச்சுனா! வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட மக்கள்
#SriLanka
#Hospital
#Chavakachcheri
Mayoorikka
1 year ago
வடக்கு மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா கடந்த வாரம் விடுப்பில் கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம்(13) மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார்.
இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.