முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்து!
#SriLanka
#Accident
Mayoorikka
1 year ago

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் சற்றே விலக முற்பட்டுள்ளது.
அவ்வேளையில் கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



