யுக்திய நடவடிக்கை ; நாடளாவிய ரீதியில் 750 பேர் கைது
#SriLanka
#Arrest
#Crime
Mayoorikka
1 year ago

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 750 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 736 ஆண்களும் 14 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 25 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 274 கிராம் 232 மில்லிகிராம் ஹெரோயின், 272 கிராம் 799 மில்லிகிராம் ஐஸ், 89,240 கிராம் 325 மில்லிகிராம் கஞ்சா, 21,258 கஞ்சா செடிகள் மற்றும் 6,327 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.



