கிளப் வசந்த கொல்லப்பட்டமைக்கான காரணம்: வெளியாகிய தகவல்

#SriLanka #Colombo #Murder
Mayoorikka
1 year ago
கிளப் வசந்த கொல்லப்பட்டமைக்கான காரணம்: வெளியாகிய தகவல்

மாக்கந்துரே மதுஷை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கிய முதல் நபராக கிளப் வசந்த கொல்லப்பட்டதாக கஞ்சிபானி இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மதுஷ் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபானி இம்ரான் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 இதன்படி, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில், பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் சடலம் பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!