இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் இலங்கைக்கு விஜயம் செய்யும் முக்கியஸ்தர்!
#SriLanka
#UNESCO
Mayoorikka
1 year ago

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர், ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை இலங்கையில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்திப்பார்.
அவர் யுனெஸ்கோவில் இலங்கை அங்கத்துவம் பெற்றதன் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார். இந்த வைபவம், நெலும் பொகுன திரையரங்கில் நடைபெறும். அத்துடன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்குச் செல்வார்.



