ஜனாதிபதி தேர்தலை தடுக்க மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை தடுக்கவேண்டும் என கோரி மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருணலக்சிரி என்பவர் இது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக நீதிமன்றம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் உரியமுறையில் நிறைவேற்றப்படவில்லை இதன் காரணமாக அது உரிய முறையில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என மனுதாரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.