28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago

நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக 10.07.2024 நள்ளிரவு 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர்ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சாவை வவுனியா பொலிசார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் 10.07.2024 வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.



