வறுமை காரணமாக 15 நாள் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை
#Murder
#Pakistan
#Baby_Born
Prasu
1 year ago

பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் வறுமையின் காரணமாக தயாப் என்ற நபர் தனது 15 நாள் குழந்தையை உயிருடன் புதைத்துள்ளார்.
தனது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இத்தகைய மோசமான செயலை செய்ததாக தயாப் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில், “குழந்தைக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, தயாப் தனது நிதி நெருக்கடி காரணமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
எனவே சாக்குப்பையில் வைத்து உயிருடன் குழந்தையைப் புதைத்துள்ளார்” என தெரிவித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட தயாப் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



