அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு
#Death
#Student
#America
#Indian
Prasu
1 year ago
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள அல்பேனி பகுதியில் பார்பர்வில் அருவி அமைந்துள்ளது.
கடந்த 7-ந்தேதி அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒரு நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். அதே சமயம் மற்றொரு நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த நபர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பதும், அவர் அமெரிக்காவின் டிரினே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர் சாய் சூர்யாவின் உடலை தாயகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.