இலங்கையில் தொலைத்தொடர்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் இன்று (09.7) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர், குழுவின் போது அதில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தை திருத்துவதற்கு, தொழில்நுட்ப அமைச்சர் இந்த சட்டமூலத்தை 2024 மே 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 28 வருடங்களின் பின்னர் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப தொலைத்தொடர்பு துறையில் அதிக போட்டி நிலவும் சந்தையில் வாடிக்கையாளருக்கு அதிக நீதியை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைக்கு இந்த திருத்தம் இடமளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



