வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா மாவட்டத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் இன்று (09.07) இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானினால் அங்குறரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வவுனியா நாகர்இலுப்பைக்குளத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.