ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பாடசாலைகளுக்கு மாணவர் வரவு குறைவு
#SriLanka
#Vavuniya
#School
#closed
Lanka4
1 year ago

இலங்கை பூராகவும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் குறைந்து காணப்பட்டது.
வவுனியா நகர் பகுதி மற்றும் கிராமப்புறங்களிலும் பாடசாலை நோக்கி வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளை நோக்கி சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் ஆசிரியர்கள் எவரும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் சில பாடசாலைகளின் பிரதான வாயில்களும் பூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



