சாவகச்சேரி வைத்தியசாலையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் டக்ளஸ் வழங்கிய உறுதி

#SriLanka #Douglas Devananda #Hospital #Chavakachcheri
Mayoorikka
1 year ago
சாவகச்சேரி வைத்தியசாலையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் டக்ளஸ் வழங்கிய உறுதி

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார்.

 மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு, குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறை வழங்குவதுடன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை மீளவும் கடமைக்கு திரும்பச் செய்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முதற் கட்டமாக ஆரம்பிப்பது.

 பின்னர், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், அவை நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம், மற்றும் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!