அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினால் வட் வரியை உயர்த்த வேண்டி வரும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினால் வட் வரியை உயர்த்த வேண்டி வரும்!

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கூற்றுப்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், தற்போதைய 18% VAT 20% - 21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். 

பொதுமக்களை ஒடுக்கி இதுபோன்ற கோரிக்கையை நிறைவேற்றும் தகுதி அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். 

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!